வாசுதேவநல்லூர் ஒன்றியம் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் புதிதாக கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் பணியேற்பு பாராட்டு விழா வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் ஆர். மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் வே. ராமச்சந்திரன், சு. பா. சுபஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்ராகிம் மூசா, சௌந்தரபாண்டியன், நவீனராஜ், மாரியப்பன், அருள் சேவியர், முனீஸ்வரன், அந்தோணிச்சாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் அலுவலக பணியாளர் முருகன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சொரூபராணி வேல்துரைச்சி, முருகேசன், பானுமதி, பிரியா போன்றோர் செய்திருந்தார்கள்.