தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் திருவேங்கடம் இருந்து ராஜபாளையம் செல்லக்கூடிய சாலையில் இன்று காலையில் தமிழக வெற்றிக்கழக கொடியேற்ற விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கொடியேற்றி அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் சத்திரப்பட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகி தங்கராஜ், தென்காசி வடக்கு மாவட்டம் மாரியப்பன், மகளிர் அணி சூர்யா, ரவி, கனகராஜ், திலக், ஹமீது, காளிதாஸ், தங்க மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.