தென்காசி: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

56பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை முடிந்து இன்று காலையில் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னரசு மற்றும் துணை தலைமை ஆசிரியர் இசைவாணி தலைமையில் வரவேற்று இனிப்புகள் வழங்கினர். ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களும் தங்களது மாணவர்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கி, வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுச்சாமி. பள்ளி மேலாண்மை குழு தலைவி பாப்பம்மாள். உப தலைவி முத்துமாரி உள்ளிட்ட ஏராளமான பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி