தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளம் தெற்கு தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாரை பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதை கண்ட அங்குள்ளவர்கள் உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த 4அடி நீளமுள்ள சாரைப் பாம்பினை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.