சிலம்பாட்ட விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் பங்கேற்பு

62பார்த்தது
சிலம்பாட்ட விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சிலம்பாட்டம் பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலிருந்து அரசு தொழில் பயிற்சி நிலையம் வரை நடைபெற்றது.

மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா ப்ரியதர்ஷினி மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் 210 சிலம்பாட்டக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். தென்காசியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வைத்து 210 சிலம்பாட்டக் கலைஞர்களும் பல்வேறு வகையான சிலம்பாட்டக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர்.

அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், டேவிட், ஜெயசிங், மாரீஸ்வரன், சாமத்துரை, கலைச்செல்வி, பிரபாகர், மகளிர் திட்ட அலுவலர்கள் ஜெயலட்சுமி, பொன்கனிலன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக பணியாளர் கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்,

விளையாட்டுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி