விநாயகர் கோவில் அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

79பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருவிகுளம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவேங்கடம் சித்தி விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் ஆக்கிரமிப்பு இடம் என்பதால் கண்டிப்பான முறையில் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி