தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தினசரி காய்கறி நாளங்காடி இயங்கி வந்தது அதற்கு போதிய அனுமதி இல்லை எனக் கூறி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இன்றைக்கு அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்போடு சீல் வைக்க முயன்றனர் அப்போது வியாபாரிகளுக்கும் பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது அதனைத் தினசரி நாலங்காடிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் இதனை அடுத்து நாலங்காடிக்கு காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை எனக் கூறி சாலையில் காய்கறிகளை கொட்டிச் சென்றனர் இதனால் திருவேங்கடம் சாலையில் ஓர் பரபரப்பான பதட்டமான நிலை காணப்பட்டது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி சென்றனர்