சங்கரன்கோவில்: காா்கள் மோதி விபத்து: பெட்ரோல் நிலைய உரிமையாளா் பலி

66பார்த்தது
சங்கரன்கோவில்: காா்கள் மோதி விபத்து: பெட்ரோல் நிலைய உரிமையாளா் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள தெற்கு பனவடலியைச் சேர்ந்த சுப்பையாபாண்டியன் மகன் அருண்பாண்டியன் (31). இவர் சங்கரன்கோவில் அருகே புதிதாக பெட்ரோல் நிலையம் அமைக்கவுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடைபெற்று வந்த பணிகளைப் பார்வையிட்ட அவர் அதிகாலை 2 மணியளவில் காரில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றாராம். கார் குருக்கள்பட்டி ஆஞ்சனேயர் கோயில் அருகே சென்றபோது, இவரது காரும் எதிரே நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலை நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனவாம். இதில் இரண்டு கார்களும் நொறுங்கியதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்த போலீசார், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுற்றுலா சென்ற காரில் வந்த நபர்கள் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி