சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மக்கள் கோரிக்கை

51பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றித்திரிகிறது. மாடுகள் வளர்ப்பவர்கள் பால்கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்நடைகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர்.

சாலையோரம் உள்ள பழக்கடைகள், பூக்கடைகளில் உள்ள பொருட்களை மாடுகள் கடை உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் கீழே தள்ளி தின்று விடுகிறது. சில நேரங்களில் சாலையோரம் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று சண்டையிட்டு அமர்ந்து விடுவதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது.

மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் மீது மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் மோதி காயமடைந்து வரும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆகையால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் இதற்கான நிரந்தரதீர்வு காணமுடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி