தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 7-ம் திருநாளான இன்று காலை 8. 45 மணிக்கு பெருமாள் சயன கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து பெரிய ஆழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய திரு விழாவான வருகிற 7-ந் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இத்தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.