தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரிச்செல்வம் வயது 40. இவர் அப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார்.
பாதயாத்திரை குழு சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூர் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மாரிச்செல்வம் மீது மோதியது. இதில் மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னகோயிலங்குளம் போலீசார் முருக பக்தர் மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சின்னகோயிலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.