தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு எம்ஜிஆரின் 37வது ஆண்டு இன்று நினைவு தினத்தை முன்னிட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி துணைச் செயலாளர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் எம்ஜிஆர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பையா பாண்டியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கண்ணன் (எ) ராஜு, ஒன்றிய கழக செயலாளர் மகாராஜா பாண்டியன், நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.