தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ராஜா தென்காசி மாவட்டம் திமுக பொது உறுப்பினர் கூட்டம் வாசுதேவநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் அவைத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றார்.