தென்காசி மாவட்டம் சிவகிரியில் மது விற்பதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீசார் சிவகிரி மலை கோயில் சாலையில் உள்ள கருப்பசாமி மகன் முனீஸ்(40) என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முனீஸை கைது செய்து இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.