புளியங்குடியில் இந்து வியாபாரிகள் சங்கம் துவக்கம்.

279பார்த்தது
புளியங்குடியில் இந்து வியாபாரிகள் சங்கம் துவக்கம்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து வியாபாரிகள் சங்கம் துவக்கம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகரில் இன்று இந்து வியாபாரிகள் சங்கம் கனக பாலாஜி திருமண மண்டபத்தில் வைத்து
இனிதே துவங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான இந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக RSS கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீ கார்த்திகேயன் ஜி மற்றும் VHP தென்காசி மாவட்ட செயலாளர் ஸ்ரீ முருகன் ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். புளியங்குடி இந்து வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக திரு. T. மாரியப்பன் அவர்களும் செயலாளராக திரு. V. நாகராஜ் அவர்களும் பொருளாளராக திரு. S. மாரியப்பன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் RSS அமைப்பின் சார்பாக சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ரக்க்ஷபந்தன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :