தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயநிலங்களில் மக்காச்சோளம் உளுந்து பாசிப்பயறு தட்டப்பயிறு உள்ளிட்ட பயிறு வகைகள் மகசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இன்று சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிப்பதற்காக வந்திருந்த விவசாய சங்க பொருளாளர் சுடலை மனளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது ஒவ்வொரு ஆண்டும் மழை இல்லாததாலும் அதிகமான மழை பெய்வதாலும் முதலில் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான் இது குறித்தபயிர் காப்பீடுகளை அரசுக்கு வழங்க கோரிக்கை விடுத்தும் நிவாரணம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. 980 ஹெக்டர் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.