சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம்

75பார்த்தது
சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஹிந்தி திணிப்பு மற்றும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரமகுரு, யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச்செயலர் செண்பக விநாயகம், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலர் முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலர் மதுரை பாலா, தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலர் ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோர் பேசினர். ஈ. ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது: எந்த ஒரு சூழ்நிலையிலும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் திமுக. ஹிந்தி திணிப்பு மற்றும் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக வலுவாக எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றார். அவருக்கு தென் மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி