சங்கரன்கோவிலில் திமுக கவுன்சிலர் மண்டை உடைப்பு

55பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்த நிலையில் அதன் அருகே மீன் , சிக்கன் உள்ளிட்டவற்றை ப்ரே செய்து விற்பனை செய்யும் கடையை திமுக 5வது வார்டு கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் என்பவர் நடத்தி வரும் நிலையில் அவரது தம்பி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது மது போதையில் வந்த நான்கு இளைஞர்கள் சிக்கன் ஸ்பிரே வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடையில் இருந்தவர் அவருக்கு போன் செய்து அழைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வந்த அவர்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மேலும் போதையில் நான்கு பேர் கொண்ட கும்பல் பாட்டிலால் தாக்கியதில் மண்டை உடைந்து சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் சிகிச்சைக்காக அனுமதி.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நான்கு நபர்களையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி