சங்கரன்கோவில்-சென்னை இடையே ஏசி விரைவுப் பேருந்து வர கோரிக்கை

79பார்த்தது
சங்கரன்கோவில்-சென்னை இடையே ஏசி விரைவுப் பேருந்து வர கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய விரைவுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என ஈ. ராஜா எம். எல். ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா். 

இதுதொடா்பாக போக்குவரத்து துறை அமைச்சா் சா. சி. சிவசங்கரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்தோா் தொழில், வேலை, கல்வி தொடா்பாகவும், சிகிச்சைக்காகவும் சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்குச் சென்று வருகின்றனா். எனவே மேற்குறிப்பிட்ட மூன்று நகரங்களுக்கும் சங்கரன்கோவிலில் இருந்து குளிா்சாதன வசதியுடன் கூடிய அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க வேண்டும். தென்காசி - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட விரைவுப் பேருந்து ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி