தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாரதி நகரில் அமைந்துள்ளது குலாலர் வடக்கு பகுதி தெரு. இந்த திருக்களில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வாருகால் அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது அந்தப் பகுதி தெருக்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் 8 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், அந்தப் பகுதிகளில் வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை விட்டனர் இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.