சாட்டை துரைமுருகனை கைது செய்ய டிஎஸ்பியிடம் பாஜகவினர் புகார்

69பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன்‌.
இவர் பாஜக-வில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கருத்தப்பாண்டி பிவிசி பைப்பால் அடித்து காயமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கினை வழக்கறிஞர் விவேகானந்தன் என்பவர் நடத்தி வந்த நிலையில்
நேற்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை என்கிற youtube சேனலில் நிறுவனருமான சாட்டை துரைமுருகன் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு வெளியிட்டார்.

அதில் பாதிக்கப்பட்ட மாணவனின் வழக்கறிஞர் அந்த மாணவனுக்கு சாதகமாக வழக்காடாமல் அநீதியின் பக்கம் பணம் வாங்கிக்கொண்டு சென்றதாகவும் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து,
தனது வழக்கறிஞர் விவேகானந்தன் தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவன் என்பதாலும் எனது வழக்கறிஞர் பணிக்கு அவதூறு விளைவிக்கும் வண்ணம் சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரன்கோவில் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த உள்ளதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி