சென்னையில் டாஸ்மாக்கில்
முறை கேடு நடைபெற்றதாக கூறி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அண்ணாமலையை விடுதலை செய்ய கோரியும், கைதை கண்டித்தும் சங்கரன்கோவில் பாஜக சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் முன்பு பாஜகவினர் திரண்டனர். அங்கிருந்து பாஜகவினர் ஊர்வலமாக தடையை மீறி தேரடி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக நகரத் தலைவர் கணேசன், பொதுச் செயலாளர்கள் மணிகண்டன், கோமதிநாயகம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணி, புலிக்குட்டி, ராஜலட்சுமி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் பெரியசாமி, ராஜேஸ்வரி, அருண், லட்சுமி, உதயகுமார்,
சங்கர் ராஜ், சரவணகுமார், லட்சுமணன், அருள் தமிழ்ச்செல்வன், சுப்பிரமணி, கோமதிநாயகம், சண்முகையா உள்ளிட்டோரை சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் செங்குட்டுவ வேலவன், இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் பாஜகவினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.