தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு அங்காள ஈஸ்வரி அம்மன் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், வீடுகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்ல, முறையான வடிகால் வசதி இல்லாததால், வீடுகளின் வெளிப்புறத்தில் கழிவுநீரை தேக்கி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரிக ளிடம் கேட்டால், நிதி இல்லை என்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.