தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நயினாபுரம் பகுதியில் உள்ள நெடுங்குளத்து அய்யனார் திருக்கோவிலின் கட்டிடப் பணிகள் நிறைவடைந்து சிலைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புளியங்குடி பகுதியில் இருந்து அய்யனார், பிள்ளையார், முருகன், சங்கிலி பூதத்தார் மற்றும் அதற்குரிய வாகன சிலைகள் என புதிய சிலைகளை பல்வேறு பூஜைகள் செய்து டாட்டா ஏஸ் வாகனத்தில் எடுத்துவரப்பட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் வாசல் முன்பு மேளதாளங்கள் முழங்க கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் புதிய சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்து பின்னர் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.