தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சின்னவாகைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 50வது ஆண்டுவிழா நிகழ்ச்சி இன்று பள்ளி தலைமையாசிரியர் குமுதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஆசிரியர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர் அழகுபரமசிவன் மற்றும் தெய்வக்கனி ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் பலர் கலந்துகொண்டனர்.