தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை தலைமை ஆசிரியர் பொன்னரசன், உடற்கல்வி ஆசிரியர் திருப்பதி மற்றும் முனிராஜ், ஓவியா ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.