தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நகரத்தை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா(26). ஆட்டோ ஓட்டுநரான இவா் நேற்று மாலை பைக்கில் புளியங்குடிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். முள்ளிகுளம் அருகே அவரது பைக் மீது கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியதாம்.
இதில் காயமடைந்த மகாராஜா புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறுத்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.