சிவகிரியில் தேரோட்ட விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

78பார்த்தது
சிவகிரியில் தேரோட்ட விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதசுவாமி கோவில் தேரோட்டம் திருவிழா வருகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் வைத்து பக்தர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்தார். புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கோவில் செயல் அலுவலர் கார்த்திகை லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த தேரோட்ட திருவிழாவில் ஜாதி பனியன் அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி