தென்காசி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

82பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் பட்டாசு ஆலை. நாக்பூர் ரக உரிமம் கொண்ட பட்டாசு ஆலை கடந்த ஆண்டு வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அங்குள்ள ஏராளமான பொருட்கள் தீக்கிரையாயின. 

இந்த விபத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்ததாக கூறப்படும் நிலையில் மீண்டும் அந்த பட்டாசு ஆலை உரிமத்தை புதுப்பிக்காமல் சல்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களுடன் சட்டவிரோதமாக பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருவதாக திருவேங்கடம் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் திருவேங்கடம் காவல்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து பொருட்களை பறிமுதல் செய்து பின்னர் பட்டாசு ஆலை உரிமையாளர்களான ராதாகிருஷ்ணன், கோகுல்நாத், அதிரூபன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் உரிமத்தை புதுப்பிக்காமலும் உரிமம் இல்லாமலும் பட்டாசு ஆலை செயல்பட்டால் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி