குற்றாலத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

75பார்த்தது
குற்றாலத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவுபடி குற்றாலத்தில் நேற்று தமிழ்நாடு அரசு வனத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய பசுமைப் படை மற்றும் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் அகடமி இணைந்து உலக சுற்றுச் சூழல் விழாவினை நடத்தியது

. இந்த விழாவிற்கு தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப் பாளர் முனைவர் விஜயலட்சுமி  தலைமை தாங்கினார். ஹட் நிறுவனர் முனைவர் ரெங்கநாதன், முதல்வரின் பசுமை பாதுகாவலர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலஞ்சி ஆர். பி. பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளருமான சுரேஷ் குமார் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் காட்டைக் காப்போம் என்ற விழிப்புணர்வு பாடல் பாடினார்.

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமையில் சுற்று சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் சுமார் 200  அகாஷ் அகடமி மாணவர்கள் கலந்து கொண்டு  நிலம், நீர், காற்று, & சூழல் வளம் பாதுகாக்க வேண்டியும் பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்கவும்,   துணிப்பை பயன்படுத்த வேண்டியும் மரங்களை நட்டு பாதுகாக்கவும் வேண்டியும் கோஷமிட்ட வாறு முக்கிய வீதி வழியாக  சிற்றருவி சென்று வனத்துறை வளாகத்தில் நிறைவடைந்தது.
Job Suitcase

Jobs near you