தென்காசி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டளை குடியிருப்பு அருகே உள்ள தனியார் எடை மேடை முன் பகுதியில் அருகில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் குண்டும் குழியுமாக பள்ளங்கள் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக பள்ளத்தை தார் மூலம் நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.