தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு "தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்" 2008-ல் அமைத்து திருநங்கை களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கை அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் தொடங்க மானியத்தொகை, கல்வி உதவித்தொகை, சுயஉதவிக் குழு பயிற்சி மற்றும் மானியத்தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசு ஒரு கணக் கெடுப்பை நடத்தி தற்போதுள்ள திருநங்கைகளின் எண்ணிக்கை விவரத்தின் அடிப்படையில் திருநங்கை களுக்கு கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் பொது இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்பு துறைகளுடன் இணைந்து திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்தல், அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை முகவரி திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயிஷ்மான் பாரத் அட்டை பெற்று வழங்குவதற்காக சிறப்பு முகாம் 21. 06. 2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.