தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இன்று காலையில் இருந்தே விட்டுவிட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்து கொண்டிருக்கும் சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து.
இதனால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிலிருந்து வெளியேற்றப்பட்டு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டதால் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.