தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : ஆட்சியர் தகவல்

53பார்த்தது
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி - IV பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 09. 06. 2024 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

மேற்படி தேர்வானது தென்காசி. செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், கடையநல்லூர், சிவகிரி. சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 வட்டங்களில் அமைந்துள்ள 231 தேர்வு மையங்களில் 56385 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து தேர்வு அறைக்குள் செல்வதற்கு ஏதுவாக முன் கூட்டியே தங்களின் தேர்வு மையங்களுக்கு வருகை புரிய கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தேர்வு நடைபெறும் தினத்தன்று சரியாக காலை 09. 00 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்கள். காலை 09. 00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல எக்காரணம் கொண்டும் அனுமதியில்லை.  

மேலும், தேர்வு மையத்திற்குள் செல்போன்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி