மேலப்புலியூர் கோவிலில் திருவிளக்கு பூஜை

71பார்த்தது
மேலப்புலியூர் கோவிலில் திருவிளக்கு பூஜை
தென்காசி மேலப்புலியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

 தென்காசி மேலப்புலியூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில்  மற்றும் முத்து கருப்பசாமி கோவில்களில் கடந்த மாதம் 12-06-2024 அன்று கும்பாபிஷேகம் விமர்சயாக நடை பெற்றது.

அதனை தொடர்ந்து 48 நாட்கள்  மண்டல பூஜையும்  சிறப்பு ஆராதனையும் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  நேற்று மாலை அம்மனுக்கு 201 திரு விளக்குகள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விளக்கு பூஜைக்கு வந்த பெண்களுக்கு  விளக்கு பூஜைக்கு தேவையான பூஜை பொருட்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கபட்டது.

ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி