சாலைகளில் திரிந்த பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தும் பணி

64பார்த்தது
சாலைகளில் திரிந்த பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தும் பணி
தென்காசி நகராட்சி பகுதிகளின் நீர்நிலைப் பகுதிகள், புதர் நிறைந்த பகுதிகளில் அனுமதியின்றி பன்றிகள் அலைந்து திரிந்து வந்தன.

 பன்றி வளர்ப்பவர்களுக்கு நகராட்சி மூலம் பன்றிகளை அப்புறப்படுத்த அறிவிப்புகள் வழங்கப்பட்டது

 தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் பன்றி வளர்ப்பவர்களுக்கு  கூட்டம் நடத்தப்பட்டு பன்றிகளை உடனடியாக பிடித்து நகருக்கு வெளியில் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

 பன்றி வளர்ப்பவர்கள் அதன்படி செயல்படாமல் தொடர்ந்து பன்றிகளை பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் அலைந்து திரிய விட்டதால் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி பன்றிகளை பிடித்து அப்புறப் படுத்த ஒப்பந்ததாரருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

தென்காசி நகராட்சி 
பகுதி- காளிதாஸ் நகர், சக்தி நகர், வீட்டு வசதி வாரிய உழவர் சந்தை பகுதிகள்,
 அப்துல் கலாம் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

இப்பணியில் நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்துமாரியப்பன், சுப்பிரமணி, பரப்புரையாளர் முத்துக்குமார், ஓட்டுநர் கருப்பசாமி ஆகியோர் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புடன் பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டன

தொடர்புடைய செய்தி