தொடர்ந்து பைக் திருடிய ஆசாமி கைது

60பார்த்தது
தொடர்ந்து பைக் திருடிய ஆசாமி கைது
தென்காசி மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு நடைபெ றுவதாக ஏராளமான புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் பதிவான உருவத்தை அடிப்படையாக வைத்து பைக் திருடிய நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சுரண்டை பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த குத்தாலிங்கம் என்பவரது மகன் அசோக்குமார் (வயது 46) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அசோக் குமாரை இன்று கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சுரண்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகு தியில் மூன்று இருசக்கர வாகனங்களும், சாம்ப வர்வடகரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வாகனமும், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வாகனமும் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி