மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் என். வெங்கடேசன் சிறு விபத்தில் காயமுற்று மருத்துவ சிகிச்சை முடிந்து மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தென்காசியில் உள்ள வெங்கடேஸ்வரன் வீட்டிற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ. சிவ பத்மநாதன், அரசு வழக்கறிஞர் முருகன் ஆகியோர் சென்று வெங்கடேஸ்வரனிடம் உடல் நலம் விசாரித்தனர். மேலும் பூரண குணமடைய அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது தொண்டர் அணி தலைவர் கீழப்புலியூர் வெங்கடேசன், வார்டு செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிக உடன் சென்றனர்.