தென்காசி: பெண் கழுத்தறுத்து கொலை - ஆசாமிக்கு வலை

83பார்த்தது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமசிவன். இவரது மனைவி உமா (வயது 37). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

பரமசிவன் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் உமா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் யாரோ வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து உமாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வெளியே சென்றிருந்த பரமசிவன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது உமா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்த நிலையில் பாவூர்சத்திரம் போலீசார் நேரில் வந்து உயிரிழந்த உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலையாளி பயன்படுத்திய கத்தியை அருகில் இருந்த கிணற்றி லிருந்து போலீசார் மீட்டனர்.
கொலையாளியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பெண் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் தென்காசி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி