தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி மேற்கு ஒன்றியம் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கொட்டாகுளம் சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் நேற்று
நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக களப்பணியாற்றிய 51 திமுக நிர்வாகிகளுக்கு சிறந்த களப்பணியாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். ஒன்றிய திமுக துணைச் செயலாளர்கள் ஐயப்பன், முத்துக்குமார், பூமாரி, பொருளாளர் சிங்காரவேல், மாவட்ட பிரதிநிதிகள் பாப்பா, ஞான செல்வம், சுதாகர் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம். திவான் ஒலி அனைவரையும் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட திமுக தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேக் தாவுது, முத்துப்பாண்டி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்காசி பாராளுமன்ற தேர்தலில் திமூக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வெற்றிக்கு உழைத்திட்ட திமுக நிர்வாகிகள் 51 பேருக்கு ஒன்றிய திமுக சார்பில் சிறந்த களப்பணியாளர் விருது வழங்கப்பட்டது.