தென்காசி தெற்கு மாவட்டத் த.மா.கா. சார்பில், கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனின் பிறந்தநாளையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் என்.டி.எஸ். சார்லஸ் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொதுச்செயலாளர்கள் தங்கப்பா, விஜயராம், மாவட்டச் செயலாளர்கள் முத்துக்குமார், திருமாலழகன், மாவட்டப் பொருளாளர் சமுத்திரபாண்டி, கவிப்பாண்டியன், மாவட்டத் துணைத்தலைவர் காசிப்பெருமாள், வட்டாரத் தலைவர்கள் ஆலங்குளம் பிரபாகரன், சிவன்பாண்டி, கடையம் வடக்கு தெய்வக்குமார், பாப்பாகுடி ஆரோக்கியசார்லஸ், கடையம் தெற்கு கொம்பையாபாண்டியன், கீழப்பாவூர் மகாராஜா, நகரத் தலைவர்கள் ஆலங்குளம் முருகன், கீழப்பாவூர் முருகேசன், முக்கூடல் மைக்கேல் மதன், ஆழ்வார்குறிச்சி ரமேஷ் கணபதி, ஆலங்குளம் நகரத்துணைத் தலைவர்கள் வேலுச்சாமி, ஆதிமணிகண்டன், நகரப் பொதுச்செயலாளர் பழக்கடை செல்வக்குமார், அருள்செல்வம், நகரச் செயலாளர் கருவேல்செல்வம், நகரப் பொருளாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.