இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (டிச.27) நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் முருகையா தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிச்சைக்கனி, தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் சதீஷ்குமார், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கண்ணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன: பு
திய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், NEP ரத்து, முடக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்குதல், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், உயர்கல்வி பயின்றதற்கான ஊக்க ஊதியர்வு வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மதுரையில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் தென்காசி மாவட்டத்திலிருந்து 200 ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. கற்றல் கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எமிஸ் உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட முடியாது என மதுரையில் நடைபெறும் மாநாட்டில் தீர்மானம் நி