தென்காசி: செக் போஸ்டில் எஸ்பி திடீர் ஆய்வு

79பார்த்தது
தென்காசி எஸ்பி  சுரேஷ் குமார் தென்காசியில் இருந்து சிவகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பெட்ரோல் பங்க் அருகே உள்ள சோதனைச் சாவடியில் நேற்று இரவு  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அங்குபொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தார். தணிக்கை குறிப்பு நோட்டுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அங்கு பணியில் இருந்த  காவலர்களிடம் விளக்கிக் கூறினார்.

மேலும் விருதுநகர் மாவட்ட தென் கடைசி எல்லை -தென்காசி மாவட்ட வட கடைசி எல்லைகளுக்கு இடையில் பொதுவான இடத்தில் அனைத்து வசதிகளுடன் அனைத்து பணியாளர் களுடன் இருக்கக்கூடிய சோதனை சாவடி அமைப்பதற்கான ஏற்பாடுகள்  விரைவில் துவக்கப்படும் என்றார்.

 ஆய்வின் போது  சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி உடன் இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி