புளியரை சோதனைச் சாவடியில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட் பட்ட தமிழக-கேரள எல்லை யான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை
தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் புளியரை சோதனை சாவடியில் இன்று(26. 12. 24) திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வரும் வாகனங்களை சோதனை செய்து, பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் துறையின ருக்கு அறிவுரை களை வழங்கினார்.
மேலும் தென்காசி மாவட்டத் திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.