தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (30.12.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.