தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட இஸ்லாமிய பெண்கள் உதவும் சங்கம் ஐந்தாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் இராபர்ட் புரூஸ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நேற்று (அக்.,5) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் 37 பயனாளிகளுக்கு தொழில் உதவித்தொகையாக தலா ரூ. 10, 000/- வீதம் மொத்தம் ரூ. 3, 70, 000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 58 பயனாளிகளுக்கு தலா ரூ. 8450/- வீதம் மொத்தம் ரூ. 4, 90, 100/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும். கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கம் மூலம் 50 பயனாளி களுக்கு தொழில் உதவித் தொகையாக தலா ரூ. 10, 000/ வீதம் மொத்தம் ரூ. 5 இலட்சம் என மொத்தம் 145 பயனாளிகளுக்கு ரூ. 13, 60, 100/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்லைவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. ஆர். ஸ்ரீசீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தி. உதய கிருஷ்ணன். தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.