இந்திய அரசு நேரு யுவகேந்திரா தென்காசி மற்றும் ரெட்ரோஸ் இளைஞர் மன்றம், ஸ்ரீ துர்கா வாணி ஸ்போர்ட்ஸ் அகாதமி இணைந்து 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டார அளவிலான வாலிபால், ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று (ஜனவரி 1) நடைபெற்றது.
போட்டிகளை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை தலைமை காவலர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ சுப்ரமண்யா சாரிடபுள் ட்ரஸ்ட் ஆய்க்குடி நிறுவனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தினி ராமன் பரிசு பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர். ரெட்ரோஸ் இளைஞர் மன்ற செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.