தென்காசி மாவட்டத்தில்
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இருசக்கர ரோந்து வாகன இயக்கத்தை காவல்துறை துணைத் தலைவர் நேற்று இரவு துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங் களிலும் அவசர அழைப்புகள், பகல் மற்றும் இரவு ரோந்து பணிகள், போன்ற முக்கிய நிகழ்வுக்கு அரசு இருசக்கர ரோந்து வாகனமானது பெரும்பங்கு வைக்கிறது.
இந்நிலையில் இதை நவீனப்படுத்தும் விதமாக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி நேற்று தென்காசி மாவட்டத் தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 12 இருசக்கர ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இத்தகைய ஜிபிஎஸ் கருவி பொருத்தியதன் மூலம் வாகனம் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியவும், அவசர அழைப்பு வந்த இடத்திற்கு அருகாமையில் இருக்கும் ரோந்து வாகனத்தை சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வழிநடத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை துணை தலைவர் கூறுகையில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்காக மட்டுமே வேகமாக செல்ல வேண்டும் முக்கியமாக அனைத்து காவலர்களும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் சென்று பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன், துணை காவல் கண்காணிப் பாளர் பழனி குமார் உடனிருந்தனர்.