தென்காசி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் ஆர். சாதிர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
துணைத்தலைவர் கே. என். எல். சுப்பையா. ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப் பிரியா, சுகாதார அலுவ லர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியவுடன் மறைந்த முன்னாள் பிரத மர் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.
காங்கிரஸ் கவுன்சிலர்கள் செய்யது சுலைமான என்ற ரபீக், சுப்பிரமணியன், ஆனந்தபவன் காதர் மைதீன், பூமாதேவி முருகன், மஞ்சுளா ஆகியோர் தென்காசி நகராட்சி மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் பங்கேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என்றனர்.
கவுன்சிலர் வசந்தி வெங்கடேஸ்வரன், 'எனது வார்டில் ரயில்நகர் பகுதியில் மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே ரயில் நகர் பகுதியில் வாறுகால் அமைத்து தர வேண்டும் என்றார்.