தென்காசி வடக்கு மாவட்டம் செங்கோட்டை நகர வார்டு எண் 21, 23, 24 மற்றும் 16 வது வார்டு பகுதியில் வாறுகால் அமைக்க பொதுமக்கள் மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையின் அடிப்படையில் அந்த பகுதிகளுக்கு நேற்று (மார்ச் 28) எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா நேரில் சென்று 16 வது வார்டு பகுதியில் சாலை அமைத்திடவும், 21, 23, மற்றும் 24 வது வார்டு பகுதிக்கு சென்று வாறுகால் அமைக்க வேண்டிய இடத்தில் உள்ள மக்களிடம் கலந்தாலோசித்து அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது நகர அதிமுக செயலாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.